தன்னைத் தீண்டிய பாம்பை கடித்து கொன்ற 2 வயது சிறுமி

துருக்கியின் கந்தர் கிராமத்தில் 2 வயது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஒன்று கூடினர்.
அவர்கள் வந்து பார்த்தபோது, இரண்டு வயது சிறுமியின் வாயில் அரை மீற்றர் நீளமுள்ள பாம்பு ஒன்று கவ்வி இருந்ததைக் கண்டனர்.
அது மட்டுமின்றி சிறுமியின் கீழ் உதட்டில் பாம்பு தீண்டிய அடையாளமும் இருந்துள்ளது.
இதனையடுத்து உடனடியாக சிறுமியை மீட்டு அருகாமையில் உள்ள சிறார் வைத்தியசாலைக்கு விரைந்துள்ளனர்.
உரிய சிகிச்சைக்கு பின்னர் சிறுமி காப்பாற்றப்பட்டதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தம்மை தீண்டிய பாம்பை சிறுமி கடித்து துப்பியதாகவே கூறப்படுகிறது. இதில் பாம்பு இறந்துள்ளது.
துருக்கியில் மொத்தம் 45 வகையான பாம்புகள் காணப்படுகிறது. இதில் 12 வகை பாம்புகள் கொடிய விஷம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Post

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வரவிருக்கும் புதிய நடைமுறை
கையடக்க தொலைபேசிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கும் முறைமையொன்றை தயாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை [...]

இலங்கைக்கு திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கையில் தற்போது நிலவி [...]

சுயேட்சை வேட்பாளர் திடீர் மரணம்
2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடவிருந்த ஏ. மொஹமட் இல்யாஸ் நேற்றிரவு [...]