பேருந்து கட்டணம் குறைக்கப்பட மாட்டாது
டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பேருந்து கட்டணம் குறைக்கப்பட மாட்டாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பெற்றோலியக் கூட்டுதாபனத்தின் ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது
இந்தநிலையில் டீசல் விலை குறைப்பு தொடர்பில் கருத்துரைத்துள்ள இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன, அது பேருந்து கட்டணங்களில் தாக்கம் செலுத்தக் கூடிய அளவில் இல்லை என குறிப்பிட்டுள்ளார்..
ஒரு லீற்றர் டீசலின் விலை 35 முதல் 40 ரூபாவினால் குறைக்கப்பட்டால் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.