திருகோணமலையில் சிறுவர்களுக்கு காத்திருந்த ஆபத்து
கந்தளாய் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீனி புர பகுதியில் ஆயுதங்களுக்கு பயன்படுத்தும் தோட்டாக்கள் நேற்று (02) மாலை மீட்கப்பட்டுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சீனிபுர பகுதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த வேளையில் சந்தேகத்துக்குரிய பைப் (குழாய்) ஒன்றில் தோட்டாக்கள் இருந்துள்ளது.
அதனை சிறுவர்கள் பெற்றோருக்கு தெரியப்படுத்திய பின் அக்போபுர பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கண்டெடுக்கப்பட்ட பொருட்கள்.
T56 தோட்டாக்கள் 152,
துப்பாக்கி 04 தோட்டாக்கள்,
84s 04 தோட்டாக்கள்,
9 MM துப்பாக்கியின் தோட்டாக்கள் 20,
சைலன்சர் 01,
SLR (எஸ்எல்ஆர்) துப்பாக்கி தோட்டாக்கள் 03,
அக்போபுர குற்றத்தடுப்பு பொலிஸார் அனைத்தையும் மீட்டு இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.