கடற்கரையில் நிர்வாணமாக நின்ற 2,500 பேர்


தோல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுக்காக அவுஸ்திரேலிய கடற்கரையில் 2,500 பேர் நிர்வாணமாக திரண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உலக அளவில் தோல் புற்றுநோயால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அவுஸ்திரேலியா உள்ளது. அங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியம் கூறுகிறது.

இந்தநிலையில் அவுஸ்திரேலியாவில் கடந்த ஒரு வாரமாக தோல் புற்றுநோய் விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அவுஸ்திரேலிய மக்கள் வழக்கமான தோல் பரிசோதனைகளை செய்து கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக அந்த நாட்டின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் நேற்று காலை வழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் ஆண்கள், பெண்கள் என சுமார் 2,500 தன்னார்வலர்கள் பங்கேற்றனர். அவர்கள் சூரிய உதயத்தின்போது கடற்கரை முன்பு நிர்வாணமாக நின்று தோலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *