யாழில் முச்சக்கர வண்டிகளுக்குள் சீரழியும் சமூகம்

யாழ்ப்பாணத்தில் வித்தியாசமான முறையில் போதைப்பொருளை நபர்கள் எடுத்துக் கொள்வதாக சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் தவபாலன் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒருநாள் யாழ்ப்பாண நகரில் உள்ள ஒதுக்குப்புற ஒழுங்கையில், தேசிக்காய் கோதும் ,ஊசி சிறிஞ்சும் காணப்பட்டது. அப்போது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இது பற்றி நான் விசாரித்த போது, ஆட்டோக்களை வாடகைக்கு சுமார் 2500 ரூபாய் கொடுத்த அமர்த்தி, அதனை ஆக்கள் இல்லாத இடத்தில் நிறுத்தி விட்டு, பகல் 12 மற்றும் 2 மணிக்கு இடைப்பட்ட பகுதியில் போதை பொருளை அருந்தி விட்டு மல்லாக்கில் நித்திரை கொள்கின்றனர்.
இது தவிர கணவன் போதைப்பொருளை பயன்படுத்துவது மட்டும் அல்லாமல், மனைவிக்கும் அதனை பழக்குகின்றார்.
இதனால் கர்ப்பிணி பெண்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மனைவி சிறையில் உள்ள சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
ஆகவே போதைப் பொருள் தொடர்பான சட்டங்கள் இறுக்கப்படுகின்றன. பிணை கிடைப்பது கடினம்.
இனிவரும் காலங்களில் யாரும் தப்ப முடியாது.நிலமை மோசமாகவும் ,இறுக்கமான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.