சிவனொளிபாத மலை யாத்திரை டிசம்பரில் ஆரம்பம்


பருவக்கால ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரை, டிசம்பர் மாத பூரணை தி​னத்துடன் ஆரம்பமாகும்.

இதற்கான ஏற்பாடுகள் யாவும் முன்னெடுக்கப்படுகின்றதாக சிவனொளிபாதமலையின் தலைமை தேரர் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன க​லபொடவின் தலைமையில், நல்லத்தண்ணி கிராமசேவகர் காரியாலயத்தில் நேற்று (08) நடைபெற்ற கூட்டத்திலேயே தலைமை தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிவனொளிபாத மலைக்கு வருகைதரும் யாத்திரிகர்களுக்கான சேவைகள், பொது வசதிகள், அரச, தனியார் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகளால் முன்னெடுக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *