சாதாரண தர பரீட்சை – யாழ் இந்துக் கல்லூரி மாணவர்கள் சாதனை

கல்வி பொது தராதர சாதராண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியதை தொடர்ந்து யாழ் இந்துக் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து யாழ்.இந்துக்கல்லூரி மாணவர்கள் 99 சதவீதம் சிறந்த பெறுபேறுகளை பெற்று சாதனைப்படைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
அந்த வகையில் பரீட்சைக்கு தோற்றிய 255 மாணவர்களில் 62 மாணவர்கள் 9A சித்திகளையும்,46 மாணவர்கள் 8A சித்திகளையும்,29 மாணவர்கள் 7A சித்திகளையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இதேவேளை 2021 மே 23 முதல் ஜூன் 01 வரை நாடளாவிய ரீதியில் 3,844 பரீட்சை மையங்களில் நடைபெற்ற பரீட்சையில் 517,496 பரீட்சார்த்திகள் தோற்றினர்.அவர்களில் 407,129 பேர் பாடசாலை மாணவர்கள் மற்றும் 110,367 பேர் தனிப்பட்ட பரீட்சாத்திகளாவர்.
Related Post

யாழ். கொக்குவில் மாணவன் தேசிய மட்டத்தில் சாதனை
யாழ்.கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் தமிழ்ச்செல்வன் கஜலக்சன் 2021ம் ஆண்டு தரம் [...]

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான முக்கிய அறிவிப்பு
2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15 ஆம் [...]

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு
2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தர பரீட்சை பெறுபேறுகள் [...]