சுவிஸில் வசிக்கும் இளைஞனுடன் எதிர்வரும் தை மாதம் திருமணம் முடிக்க ஆயத்தமாக இருந்த யாழ் யுவதியின் வீட்டுக் கட்டிலுக்கு அடியிலிருந்து சமுர்த்தி அலுவலர் ஒருவர் பிடிபட்ட சம்பவம் யாழில் அரங்கேறியுள்ளது.
சமுர்த்தி உத்தியோகஸ்தர் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் காயங்களுடன் மனைவியின் உறவினர்கள் மற்றும் அயலவர்களால் மீட்கப்பட்டுள்ளார். குறித்த சமுர்த்தி அலுவலர் திருமணம் முடித்து மனைவி வீட்டில் வசித்து வந்துள்ளார்.
அவர்களின் வீட்டுக்கு அருகில் தாய் தந்தையற்ற குறித்த யுவதி சகோதரி குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந் நிலையில் யுவதிக்கும் குறித்த சமுர்த்தி உத்தியோகத்தருக்கும் இடையில் தகாத உறவு உருவாகியுள்ளது.
அ ரச உத்தியோகத்தர்களான யுவதியின் சகோதரி மற்றும் கணவன் அவர்களின் பிள்ளைகள் இல்லாத நிலையில் பகல் வேளைகளில் தனியே வீட்டில் இருக்கும் யுவதியுடன் சமுர்த்தி அலுவலர் தொடர்பில் இருந்த நிலையில் இதனை அப்பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் அவதானித்து வந்துள்ளனர்.
இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை சமுர்த்தி உத்தியோகத்தர் யுவதியின் வீட்டுக்கு சென்ற போது அப்பகுதி இளைஞர்கள் யுவதியின் சகோதரியின் கணவனுக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியுள்ளார்கள்.
சகோதரியின் கணவர் அங்கு வந்து சேர்ந்தவுடன் அவருடன் சேர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்களும் வீட்டுக்குள் புகுந்துள்ளார்கள்.
வீட்டு கதவை திறக்க சொல்லியும் யுவதி கதவைத் திறக்காது இருந்ததால் வீட்டுக் கூரை வழியாக இறங்கிய இளைஞர்களால் சமுர்த்தி அலுவலர் யுவதியின் அறைக்குள் இருந்த கட்டிலுக்கு அடியில் ஒளிந்திருந்த நிலையில் நையப்புடைக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை குறித்த யுவதிக்கு சகோதரியின் கணவனின் உறவுக்காரரான சுவிசில் வசிக்கும் இளைஞனுக்கு எதிர்வரும் தை மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்ததாக தெரியவருகின்றது.
அதேவேளை யாழில் அண்மைக்காலங்களாக இடம்பெறும் சமூகவிரோத செயல்கள், மற்றும் சமூக பிறழ்வான நடத்தைகள் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையினை கேள்விக்குறியாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.