ரஷ்ய தலைநகர் மொஸ்கோவின் புறநகர் பகுதியில் உள்ள அரங்கம் ஒன்றில் ஆயுததாரிகள் சிலர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 93 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் 145 பேர் காயமடைந்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் 5 சிறுவர்கள் உட்பட 60 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.எஸ் அமைப்பினர் இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளனர்.
எனினும் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட சந்தேகநபர்கள் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில் அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதேநேரம் இந்த விடயம் தொடர்பில் உக்ரைனுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் இந்த தாக்குதலுடன் உக்ரைனுக்கு எந்தவித தொடர்பும் இல்லை எனவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.