வாகன இலக்கத்தகடுகளை தயாரித்த நபர் கைது


கம்பஹா மாவட்டம் – சீதுவ பிரதேசத்தில் அச்சகம் ஒன்றை நடத்தும் போர்வையில், போலி வாகன இலக்கத் தகடுகளை தயாரித்த ஒருவர் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவொன்று மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறப்பு அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட 11 வது குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

எண்மாண அச்சக (Digital Printing) பணிகளை மேற்கொண்டு வந்த குறித்த நிறுவனத்தில், மோட்டார் வாகனப்பதிவு திணைக்களம் வழங்கிய வாகன இலக்கத்தகடுகளுக்கு இணையான போலி இலக்கத்தகடுகள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சட்ட ஆவணங்கள் மற்றும் உரிமங்களுக்கு ஏற்ப குறித்த இலக்கத்தகடுகள் தயாரிக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பணத்திற்காக விற்பனை செய்யும் நோக்கிலேயே இவை தயாரிக்கப்பட்டதாக சந்தேக நபர் வாக்குமூலம் அறித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட 57 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரிடம் இருந்து 19 போலி இலக்கத் தகடுகள், கணினி மற்றும் போலி இலக்கத் தகடுகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் வெற்றுத் தகடுகள், அரச இலச்சினைகள் கொண்ட அமுக்கவலகு (Compressor) என்பனவும் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *