துப்பாக்கி சூட்டில் 5 வயது குழந்தை பலி – 18 வயது இளைஞன் கைது
கதிர்காமம் – தெட்டகம பிரதேசத்தில் துப்பாக்கியொன்று தவறுதலாக வெடித்ததில் 5 வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
விபத்தின் பின்னர் குழந்தை கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
18 வயதுடைய இளைஞன் எடுத்துச் சென்ற ஏர் ரைபிள் தவறுதலாக செயலிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் 18 வயது இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.