வங்கியை உடைத்து 50 லட்சம் பெறுமதியான நகை, பணம் கொள்ளை


வங்கிக்குள் நுழைந்து சுமார் 50 லட்சம் ரூபாய் பெறுமதியான நகை மற்றும் பணம் அடங்கியிருந்த பெட்டகத்தை துாக்கிச் சென்ற கொள்ளையர்களை அடையாளம் காண்பதற்கு உதவுமாறு பொலிஸார் பொதுமக்களின் ஒத்துழைப்பை நாடியுள்ளனர்.

கடந்த 3ம் திகதி அவிசாவளை-மாரம்பே கிராமிய வங்கியில் இந்த துணிகர கொள்ளை சம்பவம் இடம்பெற்றிருந்தது. 3ஆம் திகதி அதிகாலை வங்கியின் முன்பக்க கதவை உடைத்து 3 பேர் கொள்ளையடித்து செல்லும் காட்சிகள்

அங்கிருந்த CCTV கமராவில் பதிவாகியுள்ளது.CCTV காட்சிகளில் இருந்து மறைக்க, சம்பந்தப்பட்ட மூவரும் குடையை ஏந்தி திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 40 நிமிடம் திருடர்கள் வங்கியில் தங்கியிருப்பது CCTV காட்சிகளில் தெரியவந்துள்ளது.

குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர்களின் புகைப்படங்கள் CCTV காட்சிகளில் இருந்து குற்ற ஆவணக் காப்பகத்தின் கலைஞர்களால் வரையப்பட்டது. அந்த நபர்களை கைது செய்வதற்காக, அவிசாவளை பொலிஸாரின் குற்றப் பிரிவுக்கு மேலதிகமாக,

சீதாவக்க வலய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் 0718 592 425, 0718 593 754, 0718 591 423 அல்லது 0362 222 380 ஆகிய

தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *