சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதகுரு – மனைவியும் உடைந்தை


16 வயது சிறுமியை பாலியல் ரீதியாக தாக்கிய குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த கிறிஸ்தவ மதகுரு மற்றும் அவரது மனைவி ஆகியோர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தித்தளமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட இலங்கையைச் சேர்ந்த ஷெரோத் மனோகர் (வயது 58), அவரது மனைவி ஹெலன் (55) ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் ஆதம்பாக்கத்தில் தேவாலயம் ஒன்றை நடத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் தேவாலயத்திற்கு வருகை தரும் இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் போதகர் தவறாக நடந்து கொள்வார் என்றும், அவரது மனைவி ஹெலனும் அவருக்கு ஆதரவாக இருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை தொடர்பில் முறைப்பாடு
இந்த சம்பவத்தில் தொடர்புடைய குறித்த மதபோதகர் மீது முறைப்பாட்டை அளிக்க யாரும் முன்வரவில்லை.

சில நாட்களுக்கு முன், 16 வயது சிறுமி ஒருவரின் பாட்டி, மடிப்பாக்கம் அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக மதகுரு மீது முறைப்பாட்டை செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் நேற்று (14.11.2022) பொலிஸார் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

இதன்போது சம்பவத்தை உறுதி செய்த பொலிஸார், மதகுருவை கைது செய்துள்ளனர்.

குற்றத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்தமைக்காக அவரது மனைவி ஹெலனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை 24 வயது பெண் ஒருவரை குறித்த மதகுரு, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக எழுந்த முறைப்பாடு தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *