சந்தையில் குறைவடைந்து வெங்காயத்தின் விலை
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், சந்தையில் பெரிய வெங்காயம் மற்றும் சிவப்பு வெங்காயத்தின் விலை சற்று குறைந்துள்ளது.
அதன்படி, இறக்குமதி செய்யப்படும் சிவப்பு வெங்காயம் நான்கு ரூபாவாலும், பெரிய வெங்காயம் ஏழு ரூபாவாலும் குறைந்துள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் கடந்த நாட்களில் 270 முதல் 300 ரூபா வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், உருளைக்கிழங்கின் விலையும் உயர்வாக காணப்பட்டதுடன், இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கின் விலை 220 ரூபாவிற்கும் குறைவாகவே பதிவாகியுள்ளது. இந்த நாட்களில் உள்ளூர் உருளைக்கிழங்கு 300 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது.