வெற்றி பெற்ற இங்கிலாந்து – 13.84 கோடி ரூபா பரிசு

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

2022ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணிக்கு தொடர்ந்தும் வாழ்த்துக்கள் வந்த வண்ணம் உள்ளன.

16 நாடுகள் பங்கு கொண்ட இந்த தொடரின் இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியினை எதிர்த்து பாகிஸ்தான் அணி விளையாடியது.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

இதன்படி, உலகக் கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடர்களில் இரண்டாவது முறையாகவும் இங்கிலாந்து அணி வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

இந்த போட்டிகளில் அணிகள் பெற்ற பரிசுத் தொகை குறித்த விபரங்கள் இந்திய ஊடகம் ஒன்றினால் வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கமைய, வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்ட இங்கிலாந்து அணிக்கு 13.84 கோடி ரூபா பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், இறுதி போட்டியில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணிக்கு 7.40 கோடி ரூபா பரிசுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், இந்திய அணிக்கு 4.50 கோடி ரூபாவும், இலங்கை அணிக்கு 1.85 கோடி ரூபாவும் பரிசாக கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.