LPL Final- காலி அணிக்கு 202 என்ற வெற்றி இலக்கு

கோல் கிளாடியேட்டர்ஸ் மற்றும் ஜெப்னா கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் கோல் கிளாடியேட்டர்ஸ் அணிக்கு 202 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜெப்னா கிங்ஸ் அணித்தலைவர் திசர பெரேரா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஜெப்னா கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 201 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. அணித்தலைவர் திசர பெரேரா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.
யாழ் கிங்ஸ் அணி சார்பாக அவிஷ்க பெர்னாண்டோ 63 ஓட்டங்களையும், டொம் கொஹ்லர்-காட்மோர் ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களையும் பெற்றனர்.
கோல் கிளாடியேட்டர்ஸ் சார்பில் மொஹமட் அமீர், நுவன் துஷார மற்றும் சமித் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இப்போட்டியில் 202 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோல் கிளாடியேட்டர்ஸ் அணி களமிறங்கியுள்ளது.
Related Post

IPL போட்டிக்கு தெரிவாகி யாழ் வியாஸ்காந்த்
யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் நடைபெறவுள்ள IPL போட்டியில் ராஜஸ்தான் றோயல் அணிக்கு [...]

தேசிய மட்ட உதைபந்தாட்டப் போட்டி – தெல்லிப்பழை மஹாஜனா 2ம் இடம்
கல்வி அமைச்சினால் நடாத்தப்படும் அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் பொலநறுவை [...]

கால்பந்து ஜாம்பவான் பெலே 82 ஆவது வயதில் காலமானார்
பிரேசிலின் முன்னாள் கால்பந்து வீரர் பெலே தமது 82 ஆவது வயதில் காலமானார். [...]