நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தெரிவானது பாகிஸ்தான்

2022 இருபது 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வெற்றி கொண்ட பாகிஸ்தான் அணி முதலாவது அணியாக இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
சிட்னியில் இடம்பெற்ற நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.
முதலில் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 152 ஓட்டங்களை பெற்றது.
இதையடுத்து, 153 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி துடுப்பாடிய பாகிஸ்தான் அணி, 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.
இந்த நிலையில், 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முதலாவது அணியாக இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
Related Post

மோசமான தோல்விகளின் உச்சத்தில் அவுஸ்திரேலியா
2023 உலகக்கிண்ண போட்டித் தொடரில் இன்று இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் 134 ஓட்டங்கள் [...]

நாவலர் வெற்றிக்கிண்ண நிகழ்வு இமை ஊடக நிறுவனர் விருந்தினராக
நடைபெற்றுவரும் உடுப்பிட்டி நவஜீவன் விளையாட்டுக்கழக நாவலர் வெற்றிக்கிண்ணத்தொடர் நிகழ்வின் இறுதியாட்டம் இமைத்தொலைக்காட்சியில் நேரலையில் [...]

வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்த வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி
29ஆவது ராஜன் கதிர்காமர் வெற்றிக் கிண்ணத்தை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணி சுவீகரித்தது. [...]