மோசமான தோல்விகளின் உச்சத்தில் அவுஸ்திரேலியா
2023 உலகக்கிண்ண போட்டித் தொடரில் இன்று இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் 134 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா அணியை வீழ்த்தி தென்னாபிரிக்கா அணி வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 311 ஓட்டங்களை பெற்றது.
தென்னாபிரிக்கா அணி சார்பில் குவின்டன் டி கொக் 109 ஓட்டங்களையும், எய்டன் மெக்ரம் 56 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் மிட்சல் ஸ்டார்க் மற்றும் கிளேன் மெக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
அதன்படி, 312 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 40.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 177 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
அவுஸ்திரேலியா அணி சார்பில் Marnus Labuschagne அதிகபட்சமாக 46 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் ககிசோ ரபாடா 3 விக்கெட்டுக்களையும், கேஷவ் மஹாராஜ் மற்றும் டப்ரிஷ் சம்ஷி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.