விடுதலை புலிகளின் தங்கத்தை தேடிய 8 பேர் கைது
தமிழீழ விடுதலை புலிகளால் புதைத்துவைக்கப்பட்டதாக நம்பப்படும் தங்கத்தை தோண்டி எடுக்க முயற்சித்த 8 பேர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
பொலிஸ் விசேட அதிரடி படையினரால் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் 38 முதல் 52 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பதுடன், அவர்கள் வாகரை, திருகோணமலை, வத்தேகம, நுகவெல
மற்றும் குன்னேபான பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக கைதானவர்கள் வாகரை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.