யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் இரத்த வகைகளுக்கு தட்டுப்பாடு
யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் இரத்த வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவும் நிலையில் குருதிக் கொடையாளர்களிடமிருந்து குருதி எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக B+ மற்றும் O+ ஆகிய இரத்தங்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரத்த தானம் செய்ய விரும்பும் குருதி கொடையாளர்கள் யாழ்.போதனா மருத்துவமனையின் பின்புறமாக அமைந்துள்ள
12ஆம் இலக்க நுழைவாயில் ஊடாக இரத்த வங்கிக்கு தினமும் காலை 08 மணி முதல் மாலை 05 மணி வரையில் நேரில் சமூகமளித்து குருதி கொடை வழங்க முடியும்.
இது குறித்து மேலதிக விபரங்கள் தேவையெனில் அல்லது இரத்த தான முகாம்களை ஒழுங்கமைப்பு செய்ய விரும்புவோரும் 0772105375 மற்றும் 0212223063 எனும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.
என அறிவிக்கப்பட்டுள்ளது.