அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 21 பேர் கைது

அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முற்பட்ட 21 பேரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கடற்கரையில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முற்பட்ட 21 பேரை மட்டு புதுக்குடியிருப்பு கடற்கரையில் வைத்து இன்று அதிகாலை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதுடன் 2 படகுகளை கைப்பற்றி காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து சம்பவதினமான இன்று 2 மணியளவில் அதிகாலையில் விசேட அதிரடிப்படையினர் புதுக்குடியிருப்பு கடற்கரையில் சுற்றிவளைத்து சோதனை நடவடிக்கையை மேற்கொண்ட போது இரு படகுகளில் அவுஸ்ரோலியாவுக்கு சட்டவிரோதமாக செல்வதற்கு தயாராகிய நிலையில் பெண்கள் உட்பட 21 பேரை கைது செய்தடன் இரு படகுகளை மீட்டு ஒப்படைத்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி யாழ்ப்பாணம் மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் களுவாஞ்சிக்குடியை சேர்ந்த இதன் பிரதான சூத்திரதாரி தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
Related Post

யாழில் 11 வயது சிறுமியை சீரழித்த தாய்
தாயாரினால் போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட பதின்ம வயது சிறுமி ஒருவர் சிறுவர் பாதுகாப்பு [...]

கோர விபத்து – தாயும் மகனும் பலி, தந்தையும் மகனும் வைத்தியசாலையில்
முச்சக்கர வண்டியொன்று டிப்பர் வாகனத்துடன் மோதியதில் பெண்ணொருவரும் அவரது மகனும் உயிரிழந்துள்ளனர். கொழும்பு [...]

பலத்தை பயன்படுத்த பொலிஸார் மற்றும் ஆயுதப்படைகளுக்கு அதிகாரம் உள்ளது
பொது மக்களுக்கு ஆபத்து அல்லது தீங்கு விளைவிப்பவர்கள், சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள், [...]