இரு வீடுகளை தாக்கிய மின்னல் – ஒருவர் காயம்
இரு வீடுகளின் மீது மின்னல் தாக்கியதில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், வீட்டின் மின் கட்டமைப்புகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று பண்டாரவளை – எல்ல குருந்துவத்தை என்ற இடத்தில் இடம்பெற்றிருக்கன்றது.
இதன்போது, குறித்த வீடுகளில் இருந்த பெறுமதிமிக்க மின்சாதன சாதனங்கள் சேதமடைந்துள்ளதோடு, வீட்டு மின் இணைப்புக்களும்,
வீட்டு உடமைகளும் சேதமடைந்துள்ளன. அத்தோடு, வீட்டின் சுவர்களும் சேதமடைந்துள்ளன.
மேலும், விபத்தின் பின்னர் எல்ல பொலிஸார், இராணுவத்தினர், பிரதேச செயலக அதிகாரிகள், மாவட்டச் செயலக அதிகாரிகள்,
அனர்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகள் ஆகியோர், பாதிக்கப்பட்ட வீடுகளுக்குச் சென்று பார்வையிட்டு சேத விபரங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.