யாழில் ஜனாதிபதியினால் 278 ஏக்கர் மக்களின் காணிகள் விடுவிப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று (22) யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள மக்களின் 278 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டது.
ஜே- 244 வயாவிளான் கிழக்கு , ஜே-245 வயாவிளான் மேற்கு, ஜே-252 பலாலி தெற்கு , ஜே-254 பலாலி வடக்கு, ஜே-253 பலாலி கிழக்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவில் இருந்து காணிகள் விடுவிக்கப்பட்டது
அச்சுவேலி வயாவிளான் பகுதி ரெயிலர் கடை சந்திப்பகுதியில் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட உயரதிகாரிகள் இராணுவத்தினர் காணி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.