மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடியவர் காயங்களுடன் வீதியில் சடலமாக மீட்பு


காயங்களுடன் வீதியில் விழுந்து கிடந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் வைத்தியசாலையில் இருந்து தப்பி ஓடியவர் என தொியவந்துள்ளது.

இந்த சம்பவம் திஸ்ஸமஹாராம – கல்கனு பகுதியில் நேற்று இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் திஸ்ஸமஹராம மஹசேன்புர பிரதேசத்தை சேர்ந்த 38 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த 28 ஆம் திகதி சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தவர் எனவும் நேற்று அதிகாலை அனுமதியின்றி வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்த நபரின் மரணம் தொடர்பில் திஸ்ஸமஹாராம பொலிஸார் மேலதிக விசாரணைளை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *