யாழ் பருத்தித்துறை இ.போ.ச சாலை ஊழியர்களுக்கிடையில் அடிதடி – 11 ஊழியர்கள் கைது

இ.போ.ச பருத்தித்துறை சாலை ஊழியர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை தொடர்ந்து 11 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் தற்காலிகமாக கடமையாற்றிய பருத்தித்துறை சாலை முகாமையாளர் மீண்டும் அவரது தலைமை அதிகாரியின் பணிப்பின் பெயரில், பருத்தித்துறை சாலைக்கு கடமைக்காக சென்ற வேளை
சாலை முகாமையாளர் மற்றும் எதிர் அணிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இரு தரப்பினரும், பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருக்கின்றனர்.
அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் சாலை முகாமையாளர் உட்பட நால்வரும், எதிரானவர்கள் என சொல்லப்பட்டவர்கள் 7 பேரும் என 11 பேர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்த, பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Related Post

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை
இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் [...]

யாழில் வன்முறை கும்பலை மடக்கிப்பிடித்த பொலிஸார்
யாழ்ப்பாணத்தில் வன்முறை சம்பவம் ஒன்றினை மேற்கொள்ள தயார் நிலையில் இருந்த வன்முறை கும்பலை [...]

வடிகானிலிருந்து உயிருடன் சிசு மீட்பு
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டேஷன் வட்டகொட பகுதியிலுள்ள வடிகான் ஒன்றிலிருந்து இன்று அதிகாலை [...]