வடிகானிலிருந்து உயிருடன் சிசு மீட்பு
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டேஷன் வட்டகொட பகுதியிலுள்ள வடிகான் ஒன்றிலிருந்து இன்று அதிகாலை 5.30 மணியளவில் நிறை மாத சிசு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வீதியூடாக சென்ற சிலர் சிசுவை கண்டு பொலிஸாருக்கு தகவலை வழங்கியுள்ளனர். பின்னர் சிசு லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், குறித்த சிசு உயிருடன் இருப்பதாக வைத்திய சாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சிசுவை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வைத்தியசாலையின் அதிகாரி மேலும் தெரிவித்தார்.
சிசு தொடர்பான மேலதிக விபரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை தளவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய தாய் இனம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் திருமணமாகாத 21 வயதுடைய பெண் ஆவார். இவர் வட்ட கொடை கீழ் பிரிவை வசிப்பிடமாக கொண்டவர் என்றும் சிகிச்சைகளுக்காக அவரை தற்போது லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கொட்டக்கலை பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி சுதர்சன் தெரிவித்தார்.