இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை
இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
அதன்படி பல நகரங்களிலும் வளிமாசுபாட்டு தரக்குறியீடு 100 முதல் 150 புள்ளிகளாக பதிவாகியுள்ளதாக ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட நிபுணர், பேராசிரியர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.
இந்நிலைமை எதிர்வரும் சில தினங்களுக்கு நீடிக்கும் எனவும் அவர் கூறினார். அதேசமயம் எதிர்வரும் மார்ச் மாதம் வரையில் காற்றின் தரம் குறைவடைந்து காணப்படும் என தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் குறிப்பிட்டுள்ளது.
காற்றின் தரம் குறைந்தால் உடல் நிலை பாதிப்புகள் ஏற்படும் எனவும் மக்கள் அவதானமாக இருக்கவேண்டுமெனவும் குறிப்பிடப்படுகின்றது.
இதனால் சுவாச் பிரச்சினை உள்ளவர்கள் வீட்டிலேயே இருப்பது சிறந்ததெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.