உயர்தர பரீட்சையில் புதிய பாடம்

2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு கொரிய மொழி பாடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொரிய குடியரசின் பிரதிப் பிரதமர் மற்றும் கல்வி அமைச்சருக்கு இடையில் சியோல் நகரில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தென் கொரியாவில் பணிபுரியும் 22,000 இலங்கையர்களைப் பற்றிக் குறிப்பிட்ட வெளிவிவகார அமைச்சர், இலங்கையில் கொரிய மொழி புலமையை இலக்காகக் கொண்ட கற்றல் கற்கைநெறிகளின் பிரபல்யம் குறித்து குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸுக்குப் பதிலளித்த பிரதிப் பிரதமர் யூ இயூன் ஹை, இலங்கையில் தொழிற்கல்வி மற்றும் பயிற்சித் துறையின் முன்முயற்சிகளுக்கு விரிவான ஆதரவை வழங்குவதில் கொரியக் குடியரசு அக்கறை கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
Related Post

திங்கள் முதல் வழமைக்கு திரும்பும் பாடசாலைகள்
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கையை வழமை போன்று முன்னெடுக்க கல்வி [...]

45,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு இணைப்பு
2022/23 கல்வியாண்டில் பல்கலைக்கழக கல்விக்காக 45,000 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக பல்கலைக்கழக [...]

யாழில் 25 ஆண்டுகளின் பின் சாதனை படைத்த பாடசாலை
யாழ்ப்பாணம் வட்டு தெற்கு பகுதியில் அமைந்துள்ள யா/கார்த்திகேயன் வித்தியாசாலையானது 25 ஆண்டுகளின் பின்னர் [...]