எரிசக்தி அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை
எதாவதொரு ஊழியர் அல்லது தொழிற்சங்கம் சேவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தனது ட்விட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு, கடந்த 6 மாதங்களில் பெட்ரோலிய சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பெற்றோலியப் பொருட்கள் விசேட ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (18) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
இந்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொலன்னாவ, சபுகஸ்கந்த மற்றும் முத்துராஜவெல எரிபொருள் விநியோக நிலையங்களில் உள்ள எண்ணெய் நிறுவன ஊழியர்கள் இன்று சுகயீன விடுமுறையில் ஈடுபடவுள்ளதாக பெற்றோலிய தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.