வாகன கொள்வனவு தொடர்பில் பொலிஸாரின் எச்சரிக்கை


குறைந்த விலையில் வாகனம் கொள்வனவு செய்வது தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

போலி ஆவணங்களை தயாரித்து செஸி இலக்கங்களை மாற்றி அதி சொகுசு வாகனங்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான வாகனங்கள் பற்றிய தகவல்கள் இருந்தால் அது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

70 இலட்சம் ரூபா பெறுமதியான சொகுசு வாகனமொன்று 25 லட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பாணந்துறை பொலிஸார் மாறுவேடத்தில் சென்று செய்த விசாரணைகளில் இந்த மோசடி குறித்த தகவல்கள் அம்பலமாகியுள்ளது.

போலி ஆவணங்களை பயன்படுத்தி இந்த வாகனம் விற்பனை செய்யப்படவிருந்தது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாரியளவில் வாகனங்களை இறக்குமதி செய்யும் வர்த்தகர் ஒருவர் இந்த மோசடியின் பின்னணியில் இருப்பதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஆடம்பர வாகனங்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டால் அது குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமெனவும், இவ்வாறான மோசடிகளில் சிக்கி விடக்கூடாது எனவும் பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *