வவுனியாவில் சமுர்த்தி உத்தியோகத்தர் மீது தாக்குதல்
வவுனியா கந்தபுரம் சமுர்த்தி காரியாலயத்திற்குள் கடமையில் இருந்த சமுர்த்தி உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று காலை இடம்பெற்ற இத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கந்தபுரம் பிரிவில் பணிபுரியும் சமுர்த்தி உத்தியோகத்தர் அவரது காரியாலயத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த போது, அலுவலகத்திற்கு வந்த நபர் ஒருவர் தனது சமுர்த்தி கொடுப்பனவை நீக்கியதாக கூறி முரண்பட்டதுடன் குறித்த உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான சமுர்த்தி உத்தியோகத்தர் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.