சர்க்கரை அளவை குறைக்கும் ஆப்பிள்

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

ஆப்பிள் பழத்தை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடும்பொழுது அவர்களது உடலில் இன்சுலின் எதிர்ப்பு குறைத்து ரத்த சர்க்கரை அளவை குறைக்க வழிவகுக்கும்.

ஆப்பிளில் காணப்படும் பாலிபினால்கள் கணையத்தில் இன்சுலினை வெளியிடவும் செல்கள் சர்க்கரையை உறிஞ்சுவதற்கும் உதவுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சிவப்பு நிற ஆப்பிள்கள் பார்ப்பதற்கு அழகாகவும், இனிப்பான சுவை கொண்டவையாக இருந்தாலும் பச்சை நிற ஆப்பிளில் குறைந்த அளவு சர்க்கரை, அதிக நார்ச்சத்து மற்றும் அதிக ஆன்டி ஆக்சிடண்டுகள் நிறைந்துள்ளது இதனை சாப்பிடுவதால் ரத்த சர்க்கரை அளவு குறையும்.

ஒரு ஆப்பிளில் 27 கிராம் கார்போஹைட்ரேட்டுகள், 4.8 கிராம் நார்ச்சத்துக்களும் உள்ளது.

ஆப்பிளில் காணப்படும் சர்க்கரையின் பெரும்பகுதி பிரக்டோஸ் ஆகவுள்ளது

நன்மைகள்

ஆப்பிளில் உள்ள சில ஃபிளாவனாய்டுகள் கார்ப் செரிமானத்தை குறைப்பதன் மூலம் இரத்த குளுக்கோஸ் அளவை மேம்படுத்த உதவுகின்றன. 339,383 நபர்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் டைப் 2 வகை நீரிழிவு அபாயம் குறைவாக இருப்பது கணடறியப்பட்டுள்ளது.

ஆப்பிளில் பெக்டின் ஃபைபர் நிறைந்துள்ளது, இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. இதிலுள்ள நீர்சத்து வயிற்றுக்கு நிறைவான உணர்வை தருவதால் அதிகப்படியான உணவுகள் எடுத்துக்கொள்வது தவிர்க்கப்பட்டு உடல் எடை குறைகிறது.

ஆப்பிளில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மூளை ஆரோக்கியம் சிறப்பாக செயல்படுகிறது. ஆப்பிளை உணவுடன் சேர்த்து சாப்பிடாமல் காலை அல்லது மாலையில் சிற்றுண்டியாக எடுத்துக்கொள்ளும்போது அதன் முழு பலனையும் பெறலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.