இலங்கையை ஏழ்மை நாடாக பிரகடனப்படுத்த தயாராகும் அரசாங்கம்


இலங்கையை ஏழ்மை நாடாக பிரகடனம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரம், இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளது எனத் தெரியவருகின்றது.

உலக வங்கியின் கிளையான சர்வதேச அபிவிருத்தி சங்கத்தின் உதவிகளை பெறும் நோக்கிலும், அந்நியச்செலாவணி இருப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி,

பணவீக்கம், கடனை மீள செலுத்துவதில் உள்ள நெருக்கடி உள்ளிட்ட காரணிகளாலுமே இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அமைச்சரவைப் பத்திரத்தில் முழுமையான விளக்கம் வழங்கப்பட்டுள்ளது எனவும், அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப் பெற்ற பின்னர்

அது தொடர்பில் உலக வங்கிக்கு தெரியப்படுத்தப்படும் எனவும் அறியமுடிகின்றது. இலங்கையானது இதுவரையில்

மத்திய வருமானம் பெறும் நாடாகவே அடையாளப்படுத்தப்பட்டு வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *