யாழில் மது போதையில் பேருந்தை ஓட்டிச் சென்ற இ.போ.ச சாரதி கைது
நிறைபோதையில் பேருந்தை ஓட்டிச் சென்ற இ.போ.ச சாரதி ஒருவர் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் காரைநகர் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற இ.போ.ச பேருந்து சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
சாரதி மதுபோதையில் உள்ளமை தொடர்பாக மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்ட்டிருக்கின்றது. அதனடிப்படையில் மானிப்பாய் பொலிஸார் சண்டிலிப்பாய் கட்டுடை பகுதியில் குறித்த பேருந்தினை மறித்து சாரதியை பரிசோதித்துள்ளனர்.
அப்போது சாரதி மது போதையில் இருந்தமையை உறுதி செய்ததை அடுத்து அவரை கைது செய்தனர். அதேவேளை பிறிதொரு சாரதியை வரவழைத்து பேருந்தினை அனுப்பி வைத்தனர்.