அம்பாறையில் இளைஞனை இழுத்து சென்ற முதலை – தேடுதல் தீவிரம்
அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி கல்முனை பகுதியை இணைக்கின்ற கிட்டங்கி வாவி பகுதியில் மாடுகளை மேய்ப்பதற்காக கிட்டங்கி ஆற்றில் இறங்கிய இளைஞனை நேற்று முதலை இழுத்து சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மாடுகள் கிட்டங்கி வாவியில் இறங்கி நிற்பதாக நண்பன் தெரிவித்ததற்கமைய குறித்த இளைஞன் மாடுகளை கரையேற்றுவதற்காக வாவியினுள் இறங்கிய நிலையில் முதலை இளைஞனை பிடித்து இழுத்துச் சென்றுள்ளது.
இவ்வாறு முதலை இழுத்துச் சென்று காணாமல் போனவர் சேனைக்குடியிருப்பு 1 பிரிவு 157 விக்னேஸ்வரன் வீதியை சேர்ந்த சுகிர் பிரதாஸ் (வயது-30) என்பவராவார்.
பொதுமக்களுடன் கடற்படையினர் பொலிஸார் இணைந்து தேடுதலை மேற்கொண்டு வருகின்றனர்.