யாழில் வீடு புகுந்து சரமாரி வாள்வெட்டு – 42 வயது நபர் படுகாயம்


கோவில் பிரச்சினை தொடர்பாக வடமாகாண அளுநரிடம் முறையட்ட அவுஸ்ரேலிய நாட்டவர் மீது இன்று காலை வாள்வெட்டுக் குழு ரவுடிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பண்டத்தரிப்பில் உள்ள முருகன் ஆலயம் ஒன்றில் நீண்டகாலமாக நிர்வாகத்தில் மோசடி இடம்பெற்று வருவதாக அவுஸ்திலேரியாவில் இருந்துவருகை தந்த

பண்டத்தரிப்பை சேர்ந்த கோயிலுக்கு நிதி பங்களிப்பை தொடர்ச்சியாக வழங்கி வரும் நபர் ஒருவர் குறித்த விடயம் தொடர்பில் ஆளுநரை அண்மையில் சந்தித்து பேசினார்.

இதன்போது ஆலய நிர்வாக ஊழல் மோசடி தொடர்பில் தீர்வு பெற்று தருமாறு கோரிக்கை விடுத்திருந்த நிலையில்,

இன்று காலை அவுஸ்திலேரியாவில் இருந்து வருகை தந்தவரின் வீட்டிற்கு வெகுமதி வழங்குவதாக தெரிவித்து உள்ளே சென்ற மூவர்அடங்கிய குழு

வெகுமதி பொருட்களுக்குள் மறைத்து வைத்து சென்று இனிமேல் ஆலய நிர்வாகத்தில் தலையிடுவியா எனகேட்டு அவர் மீது சரமாரியான வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளது.

குறித்து வாள் வெட்டு தாக்குதலின் போது பலத்த காயத்துக்குள்ளாகி தற்பொழுது யாழ்.போதனாவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலில் 42 வயதுடைய பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த ஆஸ்திரேலியா நாட்டுப் பிரஜை படுகாயமடைந்துள்ளார்.

வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *