நீரில் மூழ்கிய ஒருவரைக் காப்பாற்ற முயன்ற மாணவர் பலி
ஐத்தமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உன்னதச்சிய குளத்தில் நீராடச் சென்று நீரில் மூழ்கிய ஒருவரைக் காப்பாற்ற முயன்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உன்னதச்சிய குளத்தில் குளிப்பதற்கு சிலர் சென்றுள்ளனர்.
அங்கு ஒருவர் நீரில் மூழ்கி கொண்டிருந்த போது, குறித்த நபரை பாடசாலை மாணவர் ஒருவர் காப்பாற்ற முற்பட்டுள்ளார்.
காப்பாற்ற சென்ற மாணவன் நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவர் வவுணதீவு, கண்ணம்குடா பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவர் எனவும், காணாமல் போனவர் வவுணதீவு, கண்ணம்குடா பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஐத்தமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.