82 நாடுகளில், 345 மில்லியன் மக்கள் பட்டினி – ஐ.நா எச்சரிக்கை
82 நாடுகளில், 345 மில்லியன் மக்கள் பட்டினியை நோக்கி செல்வதாக ஐ.நா சபை எச்சரித்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்புக்கு முன்னர் இருந்ததைவிட இது இரண்டரை மடங்கு அதிகம் என்றும் தெரிவித்துள்ளது.
70 மில்லியன் மக்கள் உக்ரைனில் நடந்த போரினால் பட்டினிக்கு நெருக்கத்தில் தள்ளப்பட்டுள்ளதாகவும், உலகளாவிய அவசர நிலையை உலகம் எதிர் கொள்வதாகவும் ஐ.நா சபையின் உலக உணவுத் திட்டத்தின் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.