மாணவர்களுக்கு மதிய உணவு

அனைத்து அரசாங்கப் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவிலும் உள்ள மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்க விவசாய அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
அதன்படி ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் வழங்கப்பட்ட 27 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மாணவர்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்க
இந்த மதிய உணவில் பாடசாலை மாணவர்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்க போலிக் அமிலம், இரும்புச்சத்து மற்றும் விற்றமின்கள் அடங்கியதாக திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றம், உணவுப் பற்றாக்குறை என்பன பாடசாலை மாணவர்களின் போசாக்கு விடயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக, ஆரம்பப் பிரிவுகளில் உள்ள பிள்ளைகளின் போசாக்கை உறுதிப்படுத்தும் வகையில் உணவு வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
Related Post

ஒரே பிரசவத்தில் பிறந்த மூவர் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை
மாத்தறை, கொட்டபொல தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று [...]

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருந்த 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை [...]

A/L பரீட்சார்த்திகளுக்கு விசேட பரீட்சை வழிகாட்டல்கள்
எதிர்வரும் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, கொவிட்-19 தொற்றுக்குள்ளான [...]