ஒரே வீட்டில் இரு பெண்கள் சடலமாக மீட்பு
வீடொன்றிலிருந்து இரு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.
பதுளை – ஹிங்குருகமுவ பகுதியில் உள்ள வீடொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
55 மற்றும் 83 வயதுடைய இருவரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த மரணங்கள் தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்த விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.