இன்றைய மின்வெட்டு விபரம்
நாட்டில் இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் இன்று 2 மணித்தியாலங்கள் மின்வெட்டை மேற்கொள்ள மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதேவேளை, இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு மற்றும் அது தொடர்பான வேலைத்திட்டங்களுக்கு தேவையான முன்மொழிவுகள் இம்மாத இறுதிக்குள் அமைச்சரவையின் அனுமதிக்கு சமர்ப்பிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.