யாழில் இடம்பெற்ற கோரவிபத்து – 3 பேர் படுகாயம்


யாழ்.சிறுப்பிட்டி பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கட்டுப்பாடற்ற வேகத்தில் பயணித்த கார் வீதியைவிட்ட விலவி எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த 3 பேர் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *