சீரற்ற காலநிலையால் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு
நிலவும் சீரற்ற காலநிலையால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 53 ஆயிரத்து 901 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சமூக வைத்திய நிபுணர் வைத்தியர் இந்திக்க வீரசிங்க தெரிவித்தார்.
அத்துடன், 60 சதவீதத்திற்கும் அதிகமான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அவற்றில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என சமூக வைத்திய நிபுணர் வைத்தியர் இந்திக்க வீரசிங்க தெரிவித்தார்.