மட்டக்களப்பில் குளிர்சாதன பெட்டியை திறந்த இளம் தாய் மரணம்


குளிர்சாதன பெட்டியில் இருந்த பொருளை எடுப்பதற்கு முயற்சித்த இளம் தாய் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் மட்டக்களப்பு – ஓட்டமாவடி பகுதியில் நேற்றுமாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 2 பிள்ளைகளின் தாயான அ.பஸ்மியா (வயது35) என்பவரே உயிரிழந்தார்.

தனது வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டியில் இருந்து பொருளை எடுப்பதற்காக கதவை திறந்தபோது குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின் ஒழுங்கு காரணமாக

குறித்த பெண் மீது மின்சாரம் தாக்கிய நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *