அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு
மேலும் 04 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது.
இதன்படி, காய்ந்த மிளகாய், பெரிய வெங்காயம், சிவப்பு பச்சரிசி (உள்ளூர்), பாண் மா ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு கிலோ காய்ந்த மிளகாயின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1,675 ரூபாவாகும்.
அத்துடன், ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 165 ரூபாவாகும்.
இதேவேளை, ஒரு கிலோ சிவப்பு பச்சரிசி (உள்ளூர்) ஒரு கிலோவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 169 ரூபாவாகும்.
ஒரு கிலோ பாண் மாவின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 230 ரூபாவாகும்.