காலால் உயர்தர பரீட்சை எழுதிய மாணவி திறமைச்சித்தி

இரு கைகளும் இல்லாத நிலையில் காலால் எழுதிப் படித்த மாணவி க.பொ.த உயர்தர பரீட்சையில் வர்த்தக பிரிவில் 3 A பெறுபேற்றை பெற்று திறமைச் சித்தியடைந்துள்ளார்.
எஹேலியகொட தேசிய பாடசாலையில் கல்வி கற்ற ரஷ்மி நிமேஷா குணவர்தன என்ற மாணவி உயர்தர வர்த்தக பிரிவில் சித்திகளை பெற்றுள்ளார்.
2002ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் திகதி பிறந்த ரஷ்மி, தெல்ஒழுவ பாடசாலையில் ஆரம்ப கல்வியை தொடர்ந்தார்.
2012ஆம் ஆண்டு 5ஆம் வகுப்பு புலமை பரீசில் பரீட்சையில் சித்தியடைந்த பின்னர் எஹேலியகொட தேசிய பாடசாலையில் மேலதிக கற்கை நடவடிக்கைகளை தொடர்ந்தார்.
2018ஆம் ஆண்டு இடம்பெற்ற சாதாரண தர பரீட்சையில் 8 A சித்திகளையும் ஒரு B சித்தியும் பெற்றுள்ளார்.
தற்போது உயர்தர பரீட்சையில் வர்த்தக பிரிவில் 3 A சித்திகளை பெற்றுள்ளார். அத்துடன் 2017ஆம் ஆண்டு வியட்நாமில் இடம்பெற்ற Global IT challenge 2017 Super challenger சர்வதேச போட்டியில் தங்க பதக்கம் பெற்றுள்ளார்.
வாழ்க்கையில் வெற்றி பெற குறைகள் தடையில்லை என ரஷ்மி நிரூபித்து காட்டியுள்ளார் என பலரும் அவரை பாராட்டியுள்ளனர்.
Related Post

சாதாரணதர பரீட்சைக்கான விண்ணப்ப காலம் நீடிப்பு
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி, டிசம்பர் 10ஆம் திகதி [...]

ஆரம்ப கல்வி தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரம்
உயர்தர பரீட்சை நடைபெறும் தினங்களில் ஆரம்ப வகுப்புக்களை நடத்துவது தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு [...]

மாணவர்கள் தொடர்ந்தும் முகக்கவசம் அணிவது சிறந்தது
நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்றதாக காணப்படும் நிலையில் பாடசாலை மாணவர்கள் [...]