அதிக பருமனென பிரிந்து சென்ற காதலி – பதிலடி கொடுத்த இளைஞன்
தனது உடல் எடையை காரணம்காட்டி காதலி பிரிந்து சென்றதைடுத்து, கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்தில் 70 கிலோகிராம் உடல் எடையை குறைத்து கட்டழகனாக மாறிய இளைஞன் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளார்.
இந்திய இளைஞனான புவி என்பவரே இவ்வாறு உடல் மாற்றத்தை நிகழ்த்தியுள்ளார்.
2021 ஜனவரி மாதத்தில் அவர் 139 கிலோகிராம் எடையுடன் காணப்பட்டார். அவரது பருமனை காரணம் காட்டி காதலி பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான இளைஞன், காதலிக்கு தனது செயல்களால் பதிலளிக்க விரும்பியுள்ளார்.
18 மாதங்கள் தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டு, 70 கிலோகிராம் உடல் எடையை குறைத்து, தற்போது 74 கிலோகிராம் எடையுடன் காணப்படுகிறார்.
தற்போதைய அவரது கட்டழகு தோற்றம், உடற்பிற்சிக்கான உந்துதல் காரணமாக சமூகவலைத்தளங்களில்ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார்.