பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை பாலியல் பலாத்காரம் செய்த பொறுப்பதிகாரி
பொலிஸ் சேவையில் புதிதாக இணைந்து கொண்டிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை பாலியல் பலாத்காரம் செய்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை கைது செய்வதற்கான விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேனுகா ஜயசுந்தரவின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த விசாரணைகளுக்காக பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் சமந்தி ரேனுகா தலைமையிலான குழுவினர் செவனகல பொலிஸ் நிலையம் சென்றுள்ள நிலையில் பொறுப்பதிகாரி விசாரணைகளை தவிர்க்க விடுமுறையில் சென்றுள்ளரர்.
செவனகல பொலிஸ் நிலையத்தில் அண்மையில் பணிக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள பயில் நிலை பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான பின்னர்
கொழும்புக்கு சென்று பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பணியக பொறுப்பதிகாரியை சந்தித்து முறைப்பாடளித்துள்ளார். இந் நிலையிலேயே இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி நேற்று தினம் ( 14) செவனகலைக்கு சென்றுள்ள பொறுப்பதிகாரி சமந்தி ரேனுகா தலைமையிலான குழுவினர்இ பாலியல் பலாத்காரம் நடந்த இடம் உள்ளிட்டவற்றை மேற்பார்வைச் செய்து அறிக்கையிட்டுள்ளனர்.
செவனகல பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் வாக்கு மூலம் பெற்ற பின்னர் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்க சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிய முடிகிறது.