கணவன் உயிரை காப்பாற்றி இருப்பேன் – வருத்தப்படும் மீனா
நடிகை மீனா தனது கணவர் மரணம் பற்றி உருக்கமாக பேசி இருக்கிறார். மேலும் அவர் உறுப்பு தானம் செய்வதாகவும் கூறி இருக்கிறார்.
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் 27 ஜூன் 2022 அன்று மரணம் அடைந்தார்.
அவர் கடந்த பல மாதங்களாக உடல்நிலை கோளாறு காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென மரணமடைந்தார்.
வித்யாசாகருக்கு உறுப்புகள் தானம் செய்ய நன்கொடையாளர்கள் கிடைத்து இருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என தற்போது மீனா தெரிவித்து இருக்கிறார்.
“அப்படி நடந்திருந்தால் என் வாழ்க்கையே மாறி இருக்கும். ஒருவர் உறுப்பு தானம் செய்தால் 8 உயிர்களை காப்பாற்ற முடியும்.”
“அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து நான் தற்போது உறுப்பு தானம் செய்கிறேன்” என மீனா தெரிவித்து இருக்கிறார்.