மெக்சிகோவில் இரு கும்பல்களிடையே மோதல் – 11 பேர் பலி
மெக்சிகோவின் ஜுவாரஸ் (Juarez) நகரில் இரு கும்பல்களுக்கிடையே ஏற்பட்ட மோதலின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிறையில் இரு கும்பல்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் 2 கைதிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர்.
இதை தொடர்ந்து சிறைக்கு வெளியே இந்த 2 கும்பல்களை சேர்ந்தவர்களும் கடைகளை தீ வைத்து எரித்து வன்முறையில் ஈடுபட்டதோடு, சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில், வானொலி ஒன்றில் பணிபுரியும் 4 ஊழியர்கள் உட்பட 11 பேர் கொல்லப்பட்டதாகவும் இது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.